‘’ நேருவின் இந்தியாவில் பாலியல் குற்ற வழக்குகள் உள்ள எம்.பி.க்கள்’’ : சிங்கப்பூர் பிரதமர் கருத்தால் சர்ச்சை

Singapore NehrusIndia singaporepm
By Irumporai Feb 18, 2022 04:58 AM GMT
Report

`இந்தியாவின் மக்களவையில் கிட்டத்தட்டப் பாதி எம்.பி-க்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் கிரிமினல் குற்றச்சாட்டு வழக்குகள் உள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் பேசியுள்ளது சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை அன்று சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பேசிய அந்த நாட்டு பிரதமர் லீ சியன் லூங், இந்தியாவின் முதல் பிரதமர் நேருவையும், தற்போதைய இந்திய எம்.பி.க்களின் நிலவரத்தையும் சுட்டிக்காட்டி பேசினார்.   

அதாவது  ஒரு நாட்டின் ஜனநாயகம் செயல்பட வேண்டும் என்பதை நேரு வெளிப்படுத்தினார் எனவும், அதேநேரம் நேருவின் இந்தியாவில் மக்களவை எம்.பி.க்கள் பாதி பேர் மீது கற்பழிப்பு மற்றும் கொலை உள்ளிட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருப்பதாக ஊடக தகவல்கள் தெரிவிப்பதாக கூறினார்.

சிங்கப்பூர் பிரதமரின் இந்த பேச்சு இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுட்டதியுள்ளது, அவரது பேச்சு அடங்கிய வீடியோ பதிவினை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இது தொடர்பாக மத்திய அரசை சாடியுள்ளார்

இந்த நிலையில் இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வாங்குக்கு மத்திய அரசு நேற்று சம்மன் அனுப்பியுள்ளது. இந்திய எம்.பி.க்கள் குறித்த சிங்கப்பூர் பிரதமரின் பேச்சுக்கு உரிய விளக்கம் அளிக்குமாறு  கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.