கொரோனா உச்சம்: தமிழகத்துக்கு உதவிக்கரம் நீட்டிய சிங்கப்பூர் அரசு

Singapore Chennai Oxygen
By mohanelango May 13, 2021 04:53 AM GMT
Report

சிங்கப்பூரிலிருந்து 2 இந்திய விமானப்படை விமானங்களில் 256 காலி ஆக்ஜிஸசன் சிலிண்டா்கள், கண்டெய்னா்கள் சென்னை விமானநிலையம் வந்தன.

தமிழக அரசு அதிகாரிகள் அதை பெற்றுக்கொண்டு லாரிகளில் தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு அனுப்பி வைத்தனா். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் ஆக்ஜிஸசன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்ஜிஸனை சேமித்து வைக்க போதிய சிலிண்டா்கள், கண்டெய்னா்கள் இல்லை. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜொ்மன், பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து 900 காலி சிலிண்டா்கள், மற்றும் காலி கண்டெய்னா்கள் 2 இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் சென்னை வந்தன.

அவைகள் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள ஒரு குடோணில் வைக்கப்பட்டு,ஆக்ஜிஸசன் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகத்திற்கு மேலும் காலி சிலிண்டா்கள், காலி கண்டெய்னா்கள் தேவைப்பட்டன.

அதோடு தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் தொழிற்சாலையில் ஆக்ஜிஸன் தயாரிக்க தற்காலிகமாக 3 மாதங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு உற்பத்தியாகும் ஆக்ஜிஸனை சேகரித்து வைக்க போதிய சிலிண்டா்கள், கண்டெய்னா்கள் இல்லை.

கொரோனா உச்சம்: தமிழகத்துக்கு உதவிக்கரம் நீட்டிய சிங்கப்பூர் அரசு | Singapore Government Send Oxygen Cylinders To Tn

இதையடுத்து தமிழக அரசு சிங்கப்பூா் அரசிடம் காலி சிலிண்டா்கள், காலி கண்டெய்னா்களை கேட்டது. அந்த நாட்டு அரசும் சம்மதம் தெரிவித்தது. அதன்படி சிங்கப்பூரிலிருந்து 128 காலி சிலிண்டா்கள் மற்றும் காலி கண்டெய்னா்களை ஏற்றிக்கொண்டு, இந்திய விமானப்படையின் முதல் விமானம் நேற்று இரவு 10 மணிக்கு சென்னை பழைய விமானநிலையம் வந்தது.

இதையடுத்து மேலும் 128 காலி சிலிண்டா்களுடன் மற்றொரு இந்திய விமானப்படை விமானம் சிங்கப்பூரிலிருந்து இன்று அதிகாலை 2 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தது. சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறையினா் சோதனைகள் நடத்தினா்.சோதனைகள் முடிந்ததும் தமிழக அரசு அதிகாரிகளிடம் 256 காலி சிலிண்டா்கள், கண்டெய்னா்கள் ஒப்படைக்கப்பட்டது.

அதன்பின்பு அதிகாரிகள் அந்த காலி சிலிண்டா்கள், கண்டெய்னா்களை லாரிகள் மூலம் தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைத்தனா். இதைப்போல் இன்று இரவும் மேலும் 2 இந்திய விமானப்படை விமானங்களில் சிங்கப்பூரிலிருந்து காலி சிலிண்டா்கள் சென்னைக்கு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.