கொரோனா பேரிடர் முடிவுக்கு வர ஐந்து ஆண்டுகள் ஆகும்: சிங்கப்பூர் அமைச்சர்
உலகளவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பத்து கோடியை கடந்துள்ளன. கொரோனாவால் ஏற்பட்டுள்ள மரணங்கள் 21 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா தடுப்பூசி பல்வேறு நாடுகளில் செலுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் புதிய வகை கொரோனாவும் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனா பேரிடர் முழுமையாக முடிவுக்கு வர ஐந்து ஆண்டுகள் வரை ஆகிவிடும் என சிங்கப்பூர் அமைச்சர் லாரன்ஸ் வாங்க் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “கொரோனா பேரிடர் நிச்சயம் முடிவுக்கு வரும், ஆனால் அதற்குள் நான்கு ஐந்து ஆண்டுகள் ஆகிவிடும்.
கொரோனா வைரஸ் சமூகத்தை எந்த மாதிரி மாற்றியமைக்கும் என்பது தெரியாது. கொரோனா தடுப்பூசி மீண்டும் சர்வதேச அளவில் பயணங்களை புதுப்பிக்கும். ஆனால் உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுவதற்கு நீண்ட காலம் ஆகும். கொரோனா தடுப்பூசி ஆண்டுதோறும் செலுத்தப்படக்கூடிய ஒன்றாகவும் மாறக்கூடும்.
அதே சமயம் உருமாறும் வைரஸுக்கு ஏற்றவாறும் நாம் தடுப்பூசி தயாரிக்க வேண்டியிருக்கும். ஒரே தடுப்பூசி அனைத்து வகை வைரசுக்கு எதிராகவும் செயல்படும் என்று சொல்லிவிட முடியாது” என்றுள்ளார்.