இனி விமானத்தில் பயணிகள் இதை எடுத்துச் செல்லக்கூடாது - அதிரடி அறிவிப்பு!
பவர் பேங்குகளை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
தென்கொரியா, ஏர் பூசன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று சமீபத்தில் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக அதில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் அந்த விமானம் முழுவதுமாக சேதமடைந்தது.
இதனைத் தொடர்ந்து, விமான பயணிகளின் பாதுகாப்பு கருதி செல்போன் சார்ஜ் செய்ய பயன்படுத்தப்படும் பவர் பேங்குகளை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதித்து ஏர் பூசன் நிறுவனம் உத்தரவிட்டது.
பவர் பேங்குக்கு தடை
அதன்பின், தைவானின் ஈவா ஏர்லைன்ஸ் நிறுவனமும் இந்த உத்தரவை அறிவித்தது. இந்நிலையில், தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இந்த முடிவை எடுத்துள்ளது.
அதன்படி 100 வாட் திறன் வரை கொண்ட பவர் பேங்குகளை விமானத்தில் கொண்டு செல்லலாம். ஆனால் தங்களுடன் கொண்டு செல்லும் கைப்பையில் அதனை கொண்டு செல்லக்கூடாது என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.