சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த சிங்காநல்லூர் அதிமுக வேட்பாளர் கே.ஆர் ஜெயராம்!
சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் சிலம்பம் சுற்றி பொதுமக்களை அசர வைத்து வாக்கு சேகரித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் பொதுமக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதில் கோவையில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.ஆர்.ஜெயராம் கொஞ்சம் வித்தியாசமான முறையில் மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். காய்கறிகள் விற்பனை செய்வது, ஆட்டோ ஓட்டுவது என்று மக்களை கவர்ந்து வருகிறார். இன்று சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட மசக்காளிபாளையம் பாலன் நகர் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றார்.

அந்த பகுதியில் அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர், அங்கு அவர் சிலம்பம் சுற்றி மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
சிலம்பரம் சுற்றும்போது மக்கள் ஆரவாரம் செய்தார்கள். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அப்பகுதி தொண்டர் ஒருவர் ஜெயராமுக்கு போர் வீரன் சிலை பரிசாக கொடுத்தார்.