சிங்கம் 2 திரைப்படத்தின் செட்டுக்குள் கிடந்த இளைஞர் சடலம் - போலீசார் விசாரணை..!
துாத்துக்குடி சிங்கம் 2 திரைப்படத்தின் செட்டுக்குள் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
துாத்துக்குடி மாவட்டம் ஜார்ஜ் சாலையில் பழமையான கட்டடம் ஒன்று உள்ளது. இந்த கட்டடம் நடிகர் சூர்யா நடித்த சிங்கம் 2 திரைப்படத்தின் காவல் நிலையமாக செட்டிங் செய்யப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
அதன் பின் முறையாக பராமரிப்பு இல்லாமல் விடப்பட்டது.இதையடுத்து கட்டடத்தை சுற்றிலும் புதர் மண்டியும்,பாழடைந்தும் காணப்படுகிறது.
இந்தநிலையில் துாத்துக்குடி சம்மந்தமூர்த்தி தெருவைச் சேர்ந்த பிரபு என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
சடலத்தை மீட்ட போலீசார் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.