அதிமுகவுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி : தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன்

Tamil nadu ADMK TVK
By Vinoja Aug 11, 2026 02:53 PM GMT
Report

அதிமுகவில் இருந்து கடந்த ஜூலை 23ஆம் தேதி விலகிய சிங்கை ராமச்சந்திரன், இன்று முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார்.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்த சிங்கை ராமச்சந்திரன், இந்த முடிவு கோபம், வருத்தம் அல்லது தனிப்பட்ட எதிர்பார்ப்பு காரணமாக எடுக்கப்படவில்லை என்றும், தனது மனசாட்சிக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே விலகுவதாகவும் தெரிவித்திருந்தார்.

அதிமுகவுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி : தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் | Singai Ramachandran Post About Joined Tvk

சிங்கை ராமச்சந்திரன் பதிவு

மேலும், 2016, 2019, 2021 மற்றும் 2026 தேர்தல்களில் வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக முழுமையாக உழைத்ததாகவும், 2024 மக்களவைத் தேர்தலில் கடைசி நேரத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

கடந்த சில மாதங்களாக கட்சிக்குள் நடைபெற்ற சில நிகழ்வுகள் மனவேதனையை ஏற்படுத்தியதாகவும், தனது கருத்துகள் மற்றும் கவலைகளை கட்சித் தலைமையிடம் நேர்மையாக எடுத்துரைத்தும், மனசாட்சியுடன் சமரசம் செய்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டதால் அதிமுகவில் இருந்து விலகியதாகவும் சிங்கை ராமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவர் இன்று தவெகவில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது. தேர்தலுக்குப் பின்னர் மாற்றுக் கட்சிகளில் இருந்து தவெகவில் இணைவோர் அதிகரித்து வரும் நிலையில், அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.