கேன்சருக்கு நலம் விசாரிப்பது போல் படுக்கைக்கு கூப்டுறாங்க : கதறி அழுத பிரபல நடிகை

By Irumporai Mar 23, 2023 05:09 PM GMT
Report

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிந்து, மருத்துவ உதவி கேட்டால் ஆபாசமாக பேசுவதாக பேட்டியில் கதறி அழுதுள்ளார்.

நடிகை சிந்து

பெரியத்திரை மற்றும் சின்னத்திரை நடிகையான சிந்துவுக்கு அங்காடி தெரு திரைப்படம் நல்ல பெயரை பெற்று கொடுத்தது, கடந்த சில வருடங்களுக்கு முன்பு மார்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிந்து சிக்கிச்சைக்கு உதவி கேட்டு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்த நிலையில் அவருக்கு உதவிகள் வரத்தொடங்கின.

ஆபாசமா பேசுறாங்க

இந்த நிலையில் தற்போது சிந்து அளித்துள்ள பேட்டி ஒன்றில் நான் சின்னத்திரை, வெள்ளித்திரை போன்றவற்றில் நடித்து இருக்கிறேன். எனது நிலைமையைப் பார்த்து சின்னத்திரை சங்கத்தில் இருந்து உதவி செய்தார்கள். ஆனால், நடிகர் சங்கத்தில் இருந்து இதுவரை எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. இரண்டு வருடமாக என் நண்பர்கள்தான் உதவி செய்து வருகிறார்கள் என்றார்.

கேன்சருக்கு நலம் விசாரிப்பது போல் படுக்கைக்கு கூப்டுறாங்க : கதறி அழுத பிரபல நடிகை | Sindhu Opens Up About The Struggle Cancer

இப்போது எனக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதால், நான் உதவி கேட்டு பல வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறேன். அந்த வீடியோவை பார்த்த ஒருவர் இரவு 12 மணிக்கு போன் செய்து, நலம் விசாரிப்பது போல பேசிவிட்டு பின், வீடியோ கால் வரியா? ஒரு பக்கம் மார்புலதானே கேன்சர், இன்னொரு மார்ப்பை காட்டு, 5லட்சம் தருகிறேன் என்று ஆபாசமாக பேசுவதாக சிந்து கண்ணீர் மல்க கூறியுள்ளார்.