தளபதி 68-இல் இருந்து ஒதுங்கிய ஜோ...அந்த முன்னாள் "ஜோடி"யை இணைக்க தீவிரம்
நடிகை ஜோதிகா தளபதி 68 படத்தில் நடிக்க மருத்துள்ளதாகவும் அவருக்கு பதிலாக முன்னாள் கதாநாயகி ஒருவரிடம் படக்குழு தற்போது பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தளபதி 68
விஜய்- லோகேஷ் கூட்டணியில் தற்போது வெளியீட்டிற்கு தயாராகி வரும் படம் 'லியோ' இந்த படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி பிரமாண்டமாக வெளிவரவிருக்கிறது. படத்தின் ஆடியோ லான்ச் வேலைகளும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 68 ஆவது படத்தை வெங்கட் பிரபு இயக்கப் போகிறார் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த படத்திற்கான முதற்கட்ட வேலைகளும் தற்போது தற்போது துவங்கியுள்ளது.
படத்தில் இரட்டை வேடத்தில் விஜய் நடிக்க இருப்பதால், அந்த காட்சிகளை மிகவும் தத்ரூபமாக காட்சிபடுத்திட புது டெக்னாலஜியை உபயோகப்படுத்த தற்போது நடிகர் விஜய் - இயக்குனர் வெங்கட் பிரபு ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர்.
வெளியேறிய ஜோதிகா
இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகின. இவ்விருவரின் ஜோடி ரசிகர்களின் மனம் கவர்ந்து ஜோடி என்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியது. இந்நிலையில், தான் தற்போது ஜோதிகா படத்தில் இருந்து பின்வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அவருக்கு பதிலாக ரசிகர்களின் பிடித்த மற்றொரு ஜோடியான விஜய் - சிம்ரன் கூட்டணியை தற்போது இணைக்கும் பணியில் தற்போது படக்குழு மும்முரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் சிம்ரன் நடிப்பில், ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும், உதயா போன்ற படங்களிலும், யூத் படத்தில் ஒரு பாடலிலும் இந்த ஜோடி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.