‘‘மக்களையும் காக்கவில்லை. நதிகளையும் காக்கவில்லை’’- கமல்ஹாசன் ஆவேசம்

river kamalhasaan
By Irumporai May 12, 2021 11:15 AM GMT
Report

கங்கை நதியை சுத்தப்படுத்த மத்திய அரசு 20,000 கோடி ஒதுக்கிய நிலையில் அந்த பணத்தில் கங்கை நதியினையும் காக்கவில்லை, மக்களையும் காக்கவில்லை என மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கங்கை நதியில் மிதப்பதாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த செய்தி காரணமாக பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர் நதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் மிதந்து வருவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை இந்த நிலையில் கமல்ஹாசன் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது.

ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்ட ‘நமாமி கங்கா’வில் கொரோனாவில் இறந்தவர்களின் பிணங்கள் மிதக்கின்றன மக்களையும் காக்கவில்லை.

நதிகளையும் காக்கவில்லை ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பங்கள் பரிதாபமாகக் கலைகின்றன என தெரிவித்துள்ளார்.