நல்லதுதான் சொன்னேன்.. கொலை மிரட்டல் விடுத்த விராட் ரசிகர்கள் - கதறும் பிரபல வீரர்!
விராட் கோலி ரசிகர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டவுல் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வளம் வருபவர் விராட் கோலி. இவருக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். விராட் கோலி மீது இருக்கும் அன்பால் அவரை யாரேனும் குறை கூறினால் அவரது ரசிகர்கள் கடுமையாக திட்டித்தீர்ப்பார்கள்.
அந்தவகையில் நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான சைமன் டவுல் இதுகுறித்து பேசுகையில் "விராட் கோலி தனது கிரிக்கெட்டில் மிகவும் வல்லவராக இருக்கிறார். தாம் ஆட்டம் இழந்து விடக்கூடாது என்று அவர் அதிகமாக கவலைப்படக்கூடிய வீரராக இருக்கிறார்.
கொலை மிரட்டல்
விராட் கோலி குறித்து நான் ஆயிரம் விஷயங்கள் பாராட்டிருக்கின்றேன். ஆனால், ஏதேனும் ஒரே ஒரு குறையோ அல்லது அவர் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆதங்கத்தில் பேசினால் அவர்களது ரசிகர்கள் எனக்கு கொலை மிரட்டலை தருகிறார்கள்.
நான் விராட் கோலியை தனிப்பட்ட முறையில் என்றுமே பேசியதில்லை. நாங்கள் இருவரும் நல்ல உரையாடல்களை நடத்தி இருக்கின்றோம். நாங்கள் கிரிக்கெட் குறித்து பல விஷயங்கள் பேசி இருக்கிறோம்" என்று வேதனை தெரிவித்துள்ளார்.