105-லிருந்து 72 கிலோ.... Weight Loss செய்தது எப்படி? - கண்கலங்கிய சிம்பு - வைரலாகும் வீடியோ

journey viral video weight loss actor Simbu fans emotional
By Nandhini Feb 04, 2022 08:39 AM GMT
Report

 பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான டி.ராஜேந்தரின் மகன் தான் நடிகர் சிம்பு. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார்.

நடிகர் சிம்புவிற்கு திறமை இருந்தாலும், எப்போதும் அவரை சுற்றி ஏதாவது ஒரு சர்ச்சை கிளப்பிக்கொண்டே இருக்கும். இதுவே ஒரு கட்டத்தில் அவருக்கு மைனஸாகவே அமைந்து விட்டது. 2010-ம் ஆண்டிற்கு பின்பு சிம்புவின் கெரியர் கடும் சரிவை சந்தித்தது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார் நடிகர் சிம்பு. ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி குண்டாகிவிட்டார்.

 அச்சமயத்தில் அவர் உருவகேலிக்கும் ஆளானார். இதனையடுத்து, கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா முதல் அலையின் போது ஊரடங்கு போடப்பட்ட சமயத்தில், உடல் எடையை குறைக்க முடிவெடுத்த சிம்பு, 6 மாதங்களில் 33 கிலோ உடல் எடையை குறைத்தார்.

தன்னை பற்றி விமர்சித்தவர்கள் எல்லாம் மூக்கில் மீது விரல் வைக்கும் அளவுக்கு ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்திவிட்டார்.

நடிகர் சிம்புவின் இந்த வெயிட் லாஸ் ஜர்னியை வீடியோவாக வெளியிடுமாறு ரசிகர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தார்கள். ரசிகர்களின் விருப்பதை ஏற்றுக் கொண்ட நடிகர் சிம்பு, ‘ஆத்மன்’ என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், அவர் 105 கிலோவிலிருந்து 72 கிலோ வரை உடல் எடையை குறைத்தது வரை என்னென்ன செய்தார் என்பதை காட்சிப்படுத்தி இருக்கிறார்.

உடல் எடையை குறைத்த பின் தன்னை அறியாமலேயே சிம்பு கண்கலங்கிய நெகிழ்ச்சியான காட்சியும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கிறது.

ரசிகர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ள அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.