இணையத்தில் வைரலாகும் நடிகர் சிம்புவின் புகைப்படம் ; எந்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டது தெரியுமா?

Swetha Subash
in பிரபலங்கள்Report this article
நடிகர் சிம்பு, வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு.
இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக நடித்த மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்
தற்போது உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை, நடிகர் சிம்பு அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.