நல்ல பொண்ணு இருந்தா சொல்லுங்க சார் - நடிகர் சிம்பு வேண்டுகோள்
மாநாடு படத்தின் தெலுங்குப் பதிப்பின் புரமோஷனுக்காக ஹைதராபாத் சென்ற சிம்பு திருமணம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு மழுப்பலான பதிலை கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகவிருந்த இந்தப் படம் தற்போது நவம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மாநாடு படம் தெலுங்கில் தி லூப் என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இதன் புரமோஷனுக்காக ஹைதராபாத் சென்ற சிம்பு மிகுந்த சிரமத்துக்கிடையில் எடுத்ததாகவும், அனைவரும் ஒத்துழைப்புடன் உழைத்ததாகவும் ஹைதராபாத் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும் நேரடி தெலுங்குப் படம் செய்ய தயாராக இருப்பதாகவும், நல்ல கதைக்காக காத்திருப்பதாகவும் கூறினார். அடுத்து அவர் கூறிய தகவல் முக்கியமானது. இனிவரும் என்னுடைய படங்கள் தமிழ், தெலுங்கில் தயாராகும். இல்லாவிடில் தமிழில் வெளியாகும் போது தெலுங்கிலும் 'டப்' செய்யப்பட்டு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
அப்போது சிம்புவிடம் அவரது திருமணம் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு சிரித்துக்கொண்டே நல்ல பொண்ணு இருந்தா சொல்லுங்க சார் என்று மழுப்பலாக அவர் பதிலளித்தார்.