சிம்புவின் அடுத்தக்கட்ட பாய்ச்சல் - உற்சாகத்தில் ரசிகர்கள்
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து விரைவில் ரசிகர்களை நேரில் சந்திக்க சிம்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' படம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதனால் சிம்புவின் அடுத்த படத்திற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். அவர் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சிம்பு, கெளதம் மேனன் மூன்றாவது முறையாக 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இணைந்துள்ளனர்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த பலரும் சிம்புவா இது என ஆச்சரியத்தில் வாயடைத்து போனார்கள். மேலும் சில தினங்களுக்கு முன்பு மாநாடு படத்தின் 25 வது நாளை சக்சஸ் மீட்டிங் வைத்து படக்குழுவினர் கொண்டாடினார்கள். 'வெந்து தணிந்தது காடு' படப்பிடிப்பில் இருந்ததால் இந்த விழாவில் சிம்பு கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் மாநாடு படம் ஹிட் ஆனதையொட்டி நடிகர் சிம்பு தன் ரசிகர்களுடன் விரைவில் ஒரு விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.