எல்லாம் தெரிந்துதான் காதலித்தேன்.. அந்த விஷயம் எனக்கு தேவைப்பட்டது - சிம்பு ஓபன்டாக்!
நடிகர் சிம்பு தனது காதல் மற்றும் காதல் தோல்வி குறித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
சிம்பு
கடந்த 2022ம் அண்டு நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரது திருமணம் மிகவும் பிரமாண்டமாக மகாபலிபுரத்தில் நடைபெற்றது. அதில் விஐபிகள் மட்டுமே கலந்து கொண்டன.
இந்த சூழலில் தனது திருமணம் நிகழ்வு, அவரது காதல், மற்றும் சினிமா பயனம் குறித்து ஆவணப்படம் ஒன்றை பிரபல ஒடிடியில் வெளியிட்டிருந்தார். மேலும், நயன்தாரா அதில் தனது முதல் இரண்டு காதல் குறித்தும் பேசியிருந்தார். அதாவது, முதல் காதலில் தோல்வி அடைந்து மிகுந்த மன அளவில் பாதிக்கப்பட்டதாகவும்.
குறிப்பாக ரிலேஷன்ஷிப்பில் இருந்த போது, அந்த நபர், சினிமாவை விட்டு விலக சொன்னதாகவும் கூறியிருந்தார். தானும் சினிமா விட்டு, விலகும் முடிவை எடுத்ததாகவும் கடைசியில் அந்த உறவே முறிந்து விட்டதாகவும் நயன்தாரா கூறியிருந்தார்.
காதலித்தேன்..
இந்த நிலையில், சிம்பு காதல் தோல்வி குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் தொகுப்பாளினி காதலித்து ஏமாந்து இருக்கீர்களா? என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த சிம்பு, காதலித்து ஏமாறவில்லை, நான் காதலித்தவர்கள் என்னை ஏமாற்றி இருக்கிறார்கள்.
நான் காதலித்தவர்கள், என்னோடு ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர்கள் என்னை ஏமாற்றி இருக்கிறார்கள். ஏமாற்றுவார்கள் என்று தெரிந்துதான் காதலித்து ஏமாந்தேன். ஏன் என்றால், அந்த நேரத்தில் அந்த காதல், எனக்கு தேவைப்பட்டது. என்னை ஏமாற்றியதற்காக நான் எப்போதும் அவர்கள் மீது குறை சொல்ல மாட்டேன்.
ஏன் என்றால், அந்த காதல் தோல்வி கொடுத்த வலிதான். இந்த இடத்திற்கு என்னை வரவைத்து இருக்கிறது, எனக்கு மெச்சூரிட்டி வந்து இருக்கிறது, என்னை மோல்டாக்கி இருக்கிறது அதற்கு எல்லாம் காரணம் அந்த ஏமாற்றம் கொடுத்த வலி தான் என்று தெரிவித்துள்ளார்.