சிம்புவுக்கு இன்று பிறந்தநாள் : அடுத்தடுத்து வெளியான மாஸ்ஸான அறிவிப்புகள்

SilambarasanTR HappyBirthdaySTR VendhuThanidhathuKaadu PathuThala
By Petchi Avudaiappan Feb 02, 2022 08:22 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

நடிகர் சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் படங்களின் அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டுள்ளது. 

தமிழ் சினிமாவின் பன்முக கலைஞரான டி.ராஜேந்தரின் மூத்த மகனும், ரசிகர்களால் செல்லமாக லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் சிலம்பரசன் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

சிறுவயது முதலே நடித்து வரும் அவருக்கு கடந்த 4 ஆண்டுகள் பெரும் சோதனைக் காலமாகவே அமைந்தது. அதன்பின் கடந்தாண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதால் சிம்பு மீண்டும் முழுவீச்சில் படங்களில் நடித்து வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அந்த படங்களின் அப்டேட்டுகள் வெளீயாகியுள்ளது. 

அந்த வகையில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு', இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்புவும், கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும்  ‘பத்து தல’ படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. இதேபோல் பத்து தல படத்தின் சிம்பு கதாபாத்திரத்தின் முன்னோட்ட GLIMPSE வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தாதாவாக சிம்பு இந்த படத்தில் மாஸ் காட்டுகிறார். 

இதனை ரசிகர்கள் ட்விட்டரில் HappyBirthdaySTR #VendhuThanidhathuKaadu ஆகிய ஹேஸ்டேக் மூலம் கொண்டாடி வருகின்றனர்.