சிம்புவின் 'பத்து தல' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு ; ரசிகர்கள் உற்சாகம்

update simbu new movie glimpse paththu thala simbu new film
By Swetha Subash Feb 03, 2022 07:28 AM GMT
Report

நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள 'பத்து தல' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சிம்பு கடைசியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து சிம்பு தற்போது 'வெந்து தணிந்தது காடு', 'பத்து தல', 'கொரோனா குமார்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இன்று நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு 'பத்து தல' திரைப்படக்குழு சிறப்பு போஸ்டர் மற்றும் பத்து தல திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது.

'சில்லுனு ஒரு காதல்', ’நெடுஞ்சாலை’ போன்ற படங்களை இயக்கிய ஒபலி என். கிருஷ்ணா 'பத்து தல' படத்தை இயக்குகிறார். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

திரைப்படத்தில் நடிகர் சிம்பு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த அப்டேட் சிம்புவின் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

மேலும், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.