தன்னை யாரும் நேரில் சந்திக்க வர வேண்டாம் என அறிக்கை வெளியிட்ட நடிகர் சிம்பு
தன்னை நேரில் சந்திக்க ரசிகர்கள் யாரும் தனது வீட்டின் முன்பு வந்து காத்திருக்க வேண்டாம் என நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் பொங்கலுக்கு ஈஸ்வரன் திரைப்படம் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது மாநாடு படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.
இந்நிலையில், சிம்பு ஒர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பிப்ரவரி 3 ஆம் தேதி என் பிறந்தநாள் அன்று நான் ஊரில் இருக்க மாட்டேன் என்பதால் என் வீட்டின்முன் ரசிகர்கள் காத்திருக்க வேண்டாம். மேலும், என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கு என் பிறந்தநாளில் நான் உங்களுடன் இருக்க வேண்டும்.
ஆனால் சில முன் தீர்மானங்களால் தான் வெளியூர் செல்லவுள்ளதாகவும், அதனால் பிப்ரவரி 3 ஆம் தேதி மாநாடு படத்தின் டீசர் வெளியாகும். உங்கள் அன்பிற்குக் கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு சிலம்பரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.