சிம்பு ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் ட்ரிட்: விரைவில் மாநாடு!
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். கடந்த பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் திரைப்படத்திற்கு பிறகு நீண்ட காலமாக இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை கல்யாணி தான் 'மாநாடு' திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இவர்களுடன் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா மற்றும் கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்தப்படத்தின் 'மெர்ஸைலா' என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலை யுவனும், அவரது சகோதரி பவதாரணியும் இணைந்து பாடியுள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை யுவனின் யு1 ரெக்கார்ட்ஸ் ஆடியோ உரிமையைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் ஓசூரில் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இதில் முக்கியமான சண்டை காட்சிகள் ஒன்றை படமாக்க உள்ளனர். மாநாடு திரைப்படத்தில் அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞர் வேடத்தில் நடிக்கிறார் சிம்பு. அரசியல் மாநாடு ஒன்றில் நடக்கும் அதிரடியான திருப்பங்கள் கொண்ட நிகழ்வுகளை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் முடிந்து விரைவில் திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில்
அக்டோபர் மாதம் மாநாடு திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.