சிம்புவுடன் இணைகிறாரா வெற்றிமாறன்... வெளியான தகவலால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு...

Simbu Actor STR Director vetrimaran
By Petchi Avudaiappan May 27, 2021 10:11 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in திரைப்படம்
Report

நடிகர் சிம்பு இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு, கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல, கௌதம் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு படம் தயாராக உள்ளது.

சிம்புவுடன் இணைகிறாரா வெற்றிமாறன்... வெளியான தகவலால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு... | Simbu Join With Director Vetrimaran

மீண்டும் சிம்பு தனது பழைய சினிமா பாணியில் திரும்பி உள்ளதால் வரும் ஆண்டுகளில் அவரின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளதால் மீண்டும் இழந்த இடத்தை சென்று பிடிப்பார் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படங்களை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் தற்போது நடிகர் சூரியை வைத்து விடுதலை படத்தை இயக்கி வருகிறார். தொடர்ந்து நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்தப் படங்களைத் தொடர்ந்து அவர் சிம்புவின் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.

சிம்புவுடன் இணைகிறாரா வெற்றிமாறன்... வெளியான தகவலால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு... | Simbu Join With Director Vetrimaran

இதனால் சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகிலும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.