“காதல் வளர்த்தேன்..காதல் வளர்த்தேன்” ; மீண்டும் காதல் வலையில் நடிகர் சிம்பு?..ரசிகர்கள் உற்சாகம்
மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு தற்போது பிஸியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
கோலிவுட்டில் முன்னனி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு.
அடுத்தடுத்து படங்கள் தோல்வியடைந்ததை தொடர்ந்து தனது உடல் எடையை குறைத்து கடந்த 2020 ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தில் கம் பேக் கொடுத்தார்.
படம் கலவையான விமர்சனங்களை பெற்றது . எதிர்பார்த்த வெற்றியையும் பதிவு செய்யவில்லை. இருந்தாலும் உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய சிம்புவாக களமிறங்கியதை கண்ட ரசிகர்கள் சிம்புவை கொண்டாடினார்கள்.
அதன் பிறகு மாநாடு படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
தற்போது வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்திருக்கும் சிம்பு, தற்போது காதல் வலையில் வீழ்ந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
என்னதான் சிம்பு மாஸாக ரீ- எண்ட்ரி கொடுத்தாலும் , அவர் யாரை திருமணம் செய்துக்கொள்ள போகிறார். எப்போது திருமணம் செய்துக்கொள்ள போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
நயன்தாரா, ஹன்சிகா என தன்னுடன் நடித்த நாயகிகளை சிம்பு காதலித்து வந்ததாக கூறப்பட்டது. அதனை சிம்புவும் மறுக்கவில்லை. ஹன்சிகாவுடனான காதல் திருமணம் வரையில் சென்று , பிரேக் அப் ஆனதாகவும் கூறப்படுகிறது.
த்ரிஷாவும் சிம்புவை காதலித்தார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சிம்பு ஈஸ்வரன் படத்தின் நாயகி நிதி அகர்வாலை தற்போது காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
நிதி அகர்வால் மற்றும் சிம்பு ஈஸ்வரன் படத்தில் நடித்ததிலிருந்தே காதலித்து வருகிறார்களாம். இரண்டு வருடங்களாக ஸ்ட்ராங்காக செல்லும் இவர்கள் காதல் தற்போது லிவ்வின் ரிலேஷன்ஷிப் வரை சென்றிருப்பதாகவும் கிசு கிசுக்கப்படுகிறது.
விரைவில் இந்த காதல் ஜோடி திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் கோலிவுட் வட்டார தகவல்கள் கூறுகின்றனர்.
நிதி அகர்வால் ஈஸ்வரன், பூமி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். இது தவிர பாலிவுட், தெலுங்கு படங்களிலும் அவ்வபோது தலைக்காட்டி வருகிறார்.