படக்குழுவினர் அனைவருக்கும் ‘வாட்ச்’ பரிசளித்த சிலம்பரசன் - இதுதான் காரணமா?
நடிகர் சிலம்பரசன் மாநாடு படக்குழுவினருக்கு வாட்ச் பரிசளித்து ஆச்சர்யம் அளித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர்கள் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிக்கும் படம் "மாநாடு". சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முடிவடைந்தது.

மேலும் சமீபத்தில், இப்படத்தின் ’மெஹ்ரசைலா’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மாநாடு படப்பிடிப்பு நேற்று நள்ளிரவில் முடிவடைந்ததையொட்டி தயாரிப்பாளர், சிம்பு, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். மேலும் படக்குழுவினர் அனைவருக்கும் நடிகர் சிம்பு வாட்ச் பரிசளித்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.