இனிமே தான் என்னோடைய ஆட்டத்த பாக்க போறீங்க : அசத்தலாக தெரிவித்த சிம்பு
இனிமே தான் என்னோடைய ஆட்டத்த பாக்கப் போறீங்க என ஈஸ்வரன் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு தெரிவித்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் ஈஸ்வரன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் சுசீந்திரன், சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் நடிகர் சிம்பு பேசும்போது, இதுவரை நான் எப்படி இருந்தேன்.எப்படி இப்படி மாறினேன் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும்.
ஒரு கட்டத்தில் நான் மிகவும் மன கஷ்டத்தில் இருந்தேன் அதனாலேயே எனது உடல் எடை மிகவும் கூடியிருந்தது. இறைவன் எங்கேயும் இல்லை. உள்ளத்தில் தான் இருக்கிறார். உள்ளத்தை சரி செய்தேன்.
இப்போ எல்லாம் நன்றாகவே நடக்கிறது. எல்லோரிடமும் அன்பை செலுத்துங்கள். ரசிகர்களுக்கும் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். பேச ஒன்றுமில்லை இனிமேல் செயல்தான். அடுத்தடுத்து என்னுடைய நடிப்பில் பல படங்கள் வெளியாக இருக்கிறது. ஈஸ்வரன் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றார்.