என் மகன் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டான்... - சிம்புவை நினைத்து கண் கலங்கிய டி.ராஜேந்தர்...!
என் மகன் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டான் என்று சிம்புவை நினைத்து டி.ராஜேந்தர் கண்கலங்கி பேசியுள்ளார்.
நடிகர் சிம்பு
தமிழ் சினிமாவில் பன்முக திறமை வாய்ந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்குள் நுழைந்த இவர் நடிப்பு மட்டுமல்லாது பாடுவது, பாடல் வரிகள் எழுதுவது, இயக்குவது போன்ற பல திறமைகளை கற்ற சகலகலா வல்லவர். இடைப்பட்ட காலத்தில் படங்கள் சரியாக ஓடாமல் இருந்து வந்த இவருக்கு மீண்டும் சிறந்ததொரு கம்பேக் கொடுத்த படம் 'மாநாடு'. தனது பாடி ட்ரான்ஸ்ஃபர்மேஷன் மூலமாக அனைவரையும் அசர வைத்தார் நடிகர் சிம்பு.
‘வெந்து தணிந்தது காடு’ படம்
கவுதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் 'வெந்து தணிந்தது காடு' படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இணைந்துள்ளது. இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
கண் கலங்கிய டி.ஆர்.ராஜேந்தர்
இந்நிலையில், சிம்பு செய்தவற்றை கூறி கண் கலக்கியுள்ளார் டி.ராஜேந்தர்.
இது குறித்து அவர் பேசுகையில் -
பொதுமக்கள் வெந்து தணிந்தது காடு' படத்திற்கு ஆதரவு தர வேண்டும். இப்படத்திற்காக பல நாட்கள் சாப்பிடாமல் பட்டினி கிடந்துள்ளார். ஒரு தந்தையாக அவர் தன்னுடைய உடலை வருத்தியது எனக்கு வலித்தது.
சிம்பு இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது தான் எனக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. சென்னையில் சில நாட்கள் சிகிச்சை எடுத்து கொண்ட நான், மேல்சிகிச்சைக்காக வெளிநாடு சென்றேன். சுமார் ஒரு மாதம் சிகிச்சை எடுத்து கொண்ட பிறகு சென்னை திரும்பினார். என்னை என் மகன் பொறுப்பாகவும், பத்திரமாகவும் கவனித்துக் கொண்டார். தற்போது சிம்பு மீண்டும் தன்னுடைய பணிகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார் என்று கண்கலங்கி பேசினார்.