நடிகர் சிம்புவுடன் கைகோர்க்கும் அசின்? காரணமே இவர் தான் - வைரலாகும் புகைப்படம்!

Silambarasan Asin Tamil Cinema Tamil Actors Tamil Actress
By Jiyath Jun 03, 2024 02:47 PM GMT
Report

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படத்தின் போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது. 

நடிகர் சிம்பு 

இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு பத்து தல திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்டிஆர் 48 படத்தில் அவர் நடித்து வருகிறார்.

நடிகர் சிம்புவுடன் கைகோர்க்கும் அசின்? காரணமே இவர் தான் - வைரலாகும் புகைப்படம்! | Simbu And Asin Ac Movie First Look Viral

இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

சிம்பு-அசின் 

இந்த படம் சிம்புவிற்கு முக்கியமான படமாக அமையும் என்று கூறப்படுகிறது. இதனிடையே எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் ஏசி என்ற படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அசின் நடிக்க இருந்தார்.

நடிகர் சிம்புவுடன் கைகோர்க்கும் அசின்? காரணமே இவர் தான் - வைரலாகும் புகைப்படம்! | Simbu And Asin Ac Movie First Look Viral

ஆனால், அந்த படம் அப்படியே டிராப் ஆகி விட்டது. இந்நிலையில் ஏசி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது நெட்டிசன்கள் மற்றும் சிம்பு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.