என்ன ஆச்சு சிம்புவுக்கு : திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சிக்கு உள்ளான ரசிகர்கள்

Maanadu Silambarasan Str
By Irumporai Dec 11, 2021 10:14 AM GMT
Report

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிம்பு அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஐசரி கணேசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். நடிகை ராதிகா, இப்படத்தில் சிம்புவின் தாயாராக நடிக்கிறார். 

என்ன ஆச்சு சிம்புவுக்கு : திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சிக்கு உள்ளான ரசிகர்கள் | Simbu Admitted Hoaspital Fans Shocking

இந்த நிலையில் இதனிடையே செம பிஸியாக படங்களில் நடித்து வந்த சிம்பு தற்போது திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வந்ததும், கொரோனா தொற்று காரணமா?என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று எதுவும் இல்லை. சாதாரண காய்ச்சல் தான் என்று தெரியவந்திருக்கிறது.

சிம்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து டுவிட்டரில் சிலம்பரசன் டிஆர் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.