Sunday, May 4, 2025

“இன்னும் என்னமெல்லாம் பார்க்க வேண்டி இருக்கோ” - சிம்பு படத்தின் புது அப்டேட்

STR Gautham menon SilambarasanTR
By Petchi Avudaiappan 4 years ago
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in திரைப்படம்
Report

சிம்பு நடிக்கும் 47வது படமான ’நதிகளிலே நீராடும் சூரியன்’படத்தலைப்பு மாற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் அடுத்ததாக மாநாடு, மஹா, பத்து தல ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ள நிலையில் அவரின் 47வது படத்தின் புது அப்டேட் வெளியாகியுள்ளது.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சிம்பு - இயக்குநர் கௌதம் மேனன் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என பெயரிடப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ தலைப்பு மாற்றப்பட்டிருப்பதாகவும் புதிய தலைப்பு இன்று மதியம் 12.15 மணிக்கு வெளியாகும் என்றும் படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.