ஜோவின் ஓவர் ஆக்ட்டிங் ...ஒரே சீன் தான் படமே கேட்டுடுச்சு!! சில்லுனு ஒரு காதல் இயக்குனர் வருத்தம்!!
சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய இயக்குனர் கிருஷ்ணா, படப்பிடிப்பின் போது ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
சில்லுனு ஒரு காதல்
சூர்யா - ஜோதிகா - பூமிகா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் "சில்லுனு ஒரு காதல் ". சூர்யா - ஜோதிகா இருவரின் திருமணத்தின் நெருங்கி வெளியான இப்படம் இன்றளவும் இருவரின் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாக உள்ளது.
படத்தில் பாடல்கள், சூர்யா - ஜோதிகா கெமிஸ்ட்ரி, சூர்யா - பூமிகா காம்பினேஷன் போன்றவை பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது. இப்படத்தினை இயக்கிய இயக்குனர் கிருஷ்ணா படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.
கிருஷ்ணா பேட்டி
அந்த பேட்டியில் அவர், கிளைமாக்ஸில் சூர்யா மற்றும் பூமிகா சந்திக்கும் காட்சியை குறித்து பேசினார். அதில், இஷு கௌதமை சந்திக்க வரும் போது குந்தவை உள்ளே இருப்பார். உடனே கவுதம் குந்தவியிடம் சென்று இது குறித்து கேட்க, குந்தவி எனக்கு எல்லாம் தெரியும் - நான் உன்னை காதலிக்கிறேன் - உன்னுடைய எமோஷனல் கூட எனக்கு ரொம்ப முக்கியம் என்று அழுது கொண்டே பேசுவார்.
இந்த காட்சியில் ஜோதிகா ரொம்ப எமோஷனலாக அழுதுகொண்டே நடித்திருப்பார். அவர் நடித்து முடித்த உடனே அங்கிருந்த எல்லாருமே பயங்கரமாக கிளாப் பபண்ணாங்க. எனக்கும் பிடித்திருந்தது, ஆனால், இன்னொரு டேக் போகலாம் என்றேன். உடனே ஜோதிகா நான் நடிக்கிறேன் என்ன காரணம் என்று சொல்லுங்கள் என்று கேட்டார்.
சில்லுனு ஒரு காதல் - ஜோதிகா over acting pic.twitter.com/eE4KYuNdgD
— chettyrajubhai (@chettyrajubhai) November 4, 2023
அதற்கு நான், தன்னுடைய முன்னாள் காதலி உடன் இரு என்று ஒரு மனைவி அழுது கொண்டு தன்னுடைய குழந்தையை தூக்கி கொண்டு செல்லும் போது எந்த கணவனும் மன நிம்மதியாக இருக்காது என்று கூறி அதற்காக அழாமல் அந்த காட்சியில் நடித்துக் காட்டுங்கள் என ஜோதியாகவிடம் கூறினேன் என்றார் கிருஷ்ணா.
Part 2 pic.twitter.com/L13lP93EkE
— chettyrajubhai (@chettyrajubhai) November 4, 2023
அதே போல ஜோதிகாவும் நடிக்க அதனை பலருமே ரசிக்கவில்லை. முதல் டேக்கே வையுங்கள் என்று சொன்னார்கள். எடிட்டிங் செய்யும்போது எல்லாருமே முதல் டேக் வைக்க சொல்லி வற்புறுத்தினார்கள். பிறகு அதேதான் படத்தில் வைத்தேன். ஆனால், திரையரங்கில் அந்த சீனுக்கு ரொம்ப மோசமான விமர்சனம் வந்தது, அந்த காட்சி மட்டும் நான் நினைத்தது போல் இரண்டாவதாக எடுத்த சீனை வைத்திருந்தால் படம் வேற லெவலில் சென்றிருக்கும் என்பதை கிருஷ்ணா நினைவுக் கூர்ந்தார்.