அந்த பழக்கத்திற்கு அடிமையான சில்க் சுமிதா - கள்ளக்காதலால் தற்கொலை?
இன்று வரை அனைவராலும் மறக்க முடியாத கவர்ச்சி நாயகியாக இருந்து வருபவர் தான் மறைந்த நடிகை சில்க் சுமிதா.
இளைஞர்களின் கனவு கன்னி
தமிழ் சினிமாவில் ஒப்பனைக் கலைஞராக இருந்த வந்த அவர் வினுசக்கரவர்த்தி வண்டி சக்கரம் என்ற படத்தில் முதல் முதலாக நடித்தார்.
இந்த படத்தில் வரும் கதாபாத்திரமே இவரின் பெயராக நாளடைவில் மாறியது. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் 450 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1980 களில் வெளியான திரைப்படங்களில் இவர் நடனம் ஆடாத திரைப்படங்களே இருக்காது. பல படங்களில் கவர்ச்சி நடனத்தையும் மிகச் சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தியிருந்தார்.
நடிப்பில் கவனம் செலுத்தி வந்த அவர் நாளடைவில் 3 படங்களை தயாரித்தார். ஆனால் படங்கள் தோல்வியை தழுவியது. இதனால் பெரும் நஷ்டத்திற்கு உள்ளானார்.
தற்கொலையில் முடிந்த வாழ்க்கை
மன உளைச்சலில் இருந்து வந்த அவர், போதை பழக்கத்திற்கு அடிமையானார். முதலில் பாக்கு போடுவது, அடுத்து மது அருந்துவது அதற்கு அடுத்ததாக போதை ஊசி போட்டுக் கொள்வது என தன்னை அழித்துக் கொண்டார்.
போதை ஊசியை போடுவதற்கு ஒரு மருத்துவர் தேவைப்பட்டதால் அந்த மருத்துவர் தன் வீட்டிற்கு வரவழைத்து போதை ஊசி போட்டுக் கொள்வாராம். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
மருத்துவருக்கு வயதுக்கு வந்த மகன் இருந்துள்ளார். அவருக்கு சினிமாவில் நடிக்க அதிக ஆர்வம் கொண்டதால் அந்த இளைஞருக்கு சில்க் சுமிதா உதவிகளை செய்து வந்துள்ளார்.
இதை பிடிக்காததால் இருவரையும் சேர்த்து வைத்து சந்தேகப்பட்டு பேசியுள்ளார். இதனால் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
மனஉளைச்சலில் இருந்த வந்த சில்க் சுமிதா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
வறுமையில் ஆரம்பித்த வாழ்க்கை சினிமாவில் இருந்து கடைசியில் அனாதையாக தற்கொலை செய்து கொண்டார்.