இணையத்தில் வைரலாகும் சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’ புகைப்படங்கள்!

Radikaa Sarathkumar Silambarasan Viral Photos
By Thahir Aug 09, 2021 08:28 AM GMT
Report

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

இணையத்தில் வைரலாகும் சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’ புகைப்படங்கள்! | Silambarasan Viral Photos Radikaa Sarathkumar

’விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படத்திற்குப் பிறகு சிம்பு கெளதம்மேனன் கூட்டணி 'வெந்து தணிந்தது காடு' படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் 47-வது படமாக எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

முற்றிலும் கிராமத்து பின்னணியில் வித்தியாசமான ஆக்‌ஷன் த்ரில்லரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தவாரம் திருச்செந்தூரில் தொடங்கியது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கவனம் ஈர்த்தது.

இந்த நிலையில், மெலிந்த தோற்றத்தில் இன்னும் இளமையாய் சிம்பு நடிகை ராதிகாவுடன் இருக்கும் புகைப்படமும், இயக்குநர் கெளதம் மேனன் ராதிகா உள்ளிட்ட படக்குழுவினருடன் உணவருந்தும் புகைப்படங்களும் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் இருக்கின்றன. இதனை நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.