சிக்கிம் மாநிலத்தில் நிலநடுக்கம் : பொதுமக்கள் அதிர்ச்சி

Afghanistan Turkey Earthquake
By Irumporai Feb 13, 2023 03:10 AM GMT
Report

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இன்று அதிகாலை வேளையில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதை நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) உறுதிபடுத்தியுள்ளது.

சிக்கிம் நிலநடுக்கம்

அதன்படி, இன்று பிப்ரவரி 13ஆம் தேதி அதிகாலை 4.15 மணியளவில் சிக்கிமின் யுக்சோம் பகுதியில் இருந்து 70 கிமீ தூரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.

சிக்கிம் மாநிலத்தில் நிலநடுக்கம் : பொதுமக்கள் அதிர்ச்சி | Sikkim Witness Mild Earthquake

நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் இருந்தது. நிலநடுக்கத்தின் மையப்புள்ளி என்பது, அட்சரேகை 27.81 மற்றும் தீர்க்கரேகை: 87.71, என்று குறிப்பிட்டுள்ளது. மாநிலத்தின் தலைநகர் கங்டோக்கில் இருந்து 116 கிமீ தொலைவில் இந்த யுக்சோம் நகர் உள்ளது.

உயிர்பலி

அங்கிருந்து 70 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்துள்ளது.இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித உயிர்சேதமோ பொருள் சேதமோ ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அடுத்து இந்தியவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியினை ஏற்பட்டுள்ளது. அதே போல் ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் நகரின் தென்கிழக்கு பகுதியில் 100 கிமீ தொலைவில் இன்று காலை 6.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவாகியுள்ளது என நிலநடுக்கவியல் தேசிய மையம் அறிவித்துள்ளது.