மீண்டும் ஏறிய தங்கம் விலை... இன்று வெளியான புதிய விலை விவரம் இதோ!

Gold Price in Sri Lanka Silver Gold
By Vinoja Jun 26, 2026 05:30 AM GMT
Report

தங்கம் மற்றும் வெள்ளி விலையின் இன்றைய (ஜூன் 26) நிலவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜூன் மாதத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை கணிசமாகக் குறைந்து, நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது.

மீண்டும் ஏறிய தங்கம் விலை... இன்று வெளியான புதிய விலை விவரம் இதோ! | Significant Change In Gold Prices June 26 Rate

அதன்பிறகு, சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் பொருளாதார காரணிகளால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது.

கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்ததுள்ளது. குறிப்பாக நேற்று (ஜூன் 25), 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,140க்கும், சவரனுக்கு ரூ.1,680 குறைந்து ஒரு சவரன் ரூ.105,120க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மீண்டும் ஏறிய தங்கம் விலை... இன்று வெளியான புதிய விலை விவரம் இதோ! | Significant Change In Gold Prices June 26 Rate

இந்த நிலையில், இன்று (ஜூன் 26) தங்கம் விலை மீண்டும் உயர்வை பதிவு செய்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,220க்கும், சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு சவரன் ரூ.105,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.94 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,075க்கும், சவரனுக்கு ரூ.752 உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனுடன், வெள்ளி விலையும் உயர்வை பதிவு செய்துள்ளது.ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதிகரித்து ரூ.235க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,35,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மீண்டும் ஏறிய தங்கம் விலை... இன்று வெளியான புதிய விலை விவரம் இதோ! | Significant Change In Gold Prices June 26 Rate

தொடர்ச்சியாக மூன்று நாட்கள் சரிந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால், அடுத்த சில நாட்களில் விலை எந்த திசையில் நகரும் என்பது நகை வாங்குவோர் மற்றும் முதலீட்டாளர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.