சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி டும்..டும்..டும்...! - குவியும் வாழ்த்து...!

Kiara Advani Sidharth Malhotra Married
By Nandhini 1 மாதம் முன்
Report

சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி இன்று திருமணம் செய்து கொண்டனர்.

சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி திருமணம்

பாலிவுட் நடிகை கியாரா, நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா இருவரும் காதலித்து வந்தார்கள்.

இன்று சித்தார்த் மல்ஹோத்ராவும் கியாரா அத்வானியும், ஜெய்சால்மரில் உள்ள சூர்யாகர் அரண்மனையில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இத்திருமணத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஜெய்சால்மரில் குவிந்தனர். விக்கி கௌஷல்-கத்ரீனா கைஃப், ரன்பீர்-ஆலியா மற்றும் கே.எல்.ராகுல்-அத்தியா ஷெட்டி உள்பட பல நட்சத்திர ஜோடி இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இவர்களின் திருமண வரவேற்பு வரும் பிப்ரவரி 12ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து டெல்லி வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 

இந்நிலையில், இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர்களுக்கு ரசிகர்கள், சினிமா நட்சத்திரங்கள் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

sidharth-malhotra-and-kiara-advani-married

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.