மீண்டும் சர்ச்சைக்குறிய வகையில் பதிவு ; நடிகர் சித்தார்த்துக்கு வலுக்கும் கண்டனங்கள்

narendra modi kushboo sidharth gayathri raguram saina naval
By Swetha Subash Jan 10, 2022 10:15 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் ட்வீட்டை பகிர்ந்து சித்தார்த் பதிவு செய்திருக்கும் பாலியல் ரீதியான மோசமான ட்வீட்டுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

இந்த சர்ச்சைக்குரிய ட்வீட்டுக்கு குஷ்பு, காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி சில நாள்களுக்கு முன்பு பஞ்சாப் சென்றார்.

காரில் அவர் சென்ற வழியில் போராட்டம் நடந்துகொண்டிருந்தது. இதனையடுத்து பிரதமரின் வாகனம் அடுத்து எங்கும் நகர முடியாமல் அங்கேயே 15-லிருந்து 20 நிமிடங்கள் வரை காத்திருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“தனது சொந்த பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டால், தன்னை பாதுகாப்பாக இருப்பதாக எந்த நாடும் கூறிக்கொள்ள முடியாது.

பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை நான் கண்டிக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு நடிகர் சித்தார்த் பாலியல் ரீதியாக சர்ச்சைக்குரிய முறையில் கருத்து தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். அவரது ட்வீட்டுக்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

அந்த வகையில் நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில்,

“சித் நீங்கள் ஒரு நண்பர் ஆனால் கண்டிப்பாக உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை. இது மிகவும் மோசமானது. உங்கள் தாயும், தந்தையும் உங்களைப் பற்றி பெருமைப்படமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.

ஒரு தனி நபர் மீது உங்கள் வெறுப்பை கொண்டு செல்லாதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், “இது போன்ற கேவலமான ட்வீட்கள் குறிப்பாக ஒரு நடிகரிடமிருந்து வருவதைக் கண்டு வருத்தமாக இருக்கிறது.

எதிர் வரவிருக்கும் திரைப்பட விளம்பரத்திற்காக வெறும் 5 நிமிட புகழுக்காக. பிரதமரின் பாதுகாப்பு, தேசிய ஜாம்பவான்களை கேலி செய்யும் பிரபல நடிகர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று வெட்கப்படுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.