விவசாயிகள் மீது தடியடி நடத்தியதற்கு நடிகர் சித்தார்த் ஆவேச கண்டனம்

india protest delhi
By Jon Jan 26, 2021 08:23 PM GMT
Report

நெல்லையில் இன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதற்கு நடிகர் சித்தார்த் கண்டனம். நெல்லையில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தியதன் மூலம் டெல்லி போராட்டத்திற்கு தங்களுது ஆதரவை தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்த போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறி அதனை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த தடியடிக்கு தமிழக அரசியல் தலைவர்கள் உள்பட இந்திய அரசியல் தலைவர்கள் பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் சித்தார்த் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது எப்போதும் போராட்டத்தை வன்முறையுடன் சமன் செய்கின்றனர். பாசிசம், ஒற்றை கொள்கை, வெறுப்பு அரசியல், ஏழைகள் மீதான வெறுப்பால் கீழ் நோக்கி செல்கிறோம்.

போராட்டம் ஜனநாயகத்தை கொல்லும் என்று சில கோமாளிகள் சொல்வார்கள். அவர்களை புறக்கணியுங்கள் என்று குறிப்பிட்டு உள்ளார் நடிகர் சித்தார்த்தின் இந்த ஆவேசமான டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.