சிம்புவுடன் காதலா? நல்லாத்தான் இருக்கும்...!! போட்டுடைத்த சித்தி இத்னானி
நடிகர் சிம்புவுடன் நடிகை சித்தி இத்னானி காதலில் விழுந்துள்ளதாக பல செய்திகள் அதிகளவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
சித்தி இத்னானி
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான சிம்புவின் "வெந்து தணிந்தது காடு" படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சித்தி இத்னானி. பாவை என்ற கதாபாத்திரத்தில் நடித்த அவர் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போன நாயகியாக மாறினார்.
இந்த படத்தை தொடர்ந்து இவர் ஆர்யாவுடன் முத்தையா இயக்கத்தில் "காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்" படத்தில் நடித்திருந்தார். இவருக்கும் நடிகர் சிம்புவிற்கு காதல் ஏற்பட்டுள்ளதாக சமீப காலமாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
நன்றாக தான் இருக்கும்
இது குறித்து நடிகை சித்தி இத்னானி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில், கிசுகிசு செய்தி பற்றியெல்லாம் ரொம்ப யோசிக்க கூடாது என அட்வைஸ் கொடுத்து, சினிமாவிற்கு வந்துவிட்டதால் வித்தியாசமாக பேசத்தான் செய்வார்கள் என்றார்.
நம்மை பற்றி நிறைய விஷயம் கேட்க நன்றாக தான் இருக்கும் எனக் கூறிய சித்தி இத்னானி, அது போன்ற சில செய்திகள் திடிரென்று தவறாக வந்து விடும் என குறிப்பிட்டு, அவற்றில் உண்மை இல்லாத போதிலும், அதனை பலர் நம்பிவிடுவார்கள் என கூறினர்.