சிம்புவுக்கு மாமனார் ரஜினிகாந்த் தான் - பட்டென பேசிய பிரபல நடிகை

Rajinikanth Silambarasan Vendhu Thanindhathu Kaadu
By Nandhini 2 வாரங்கள் முன்

நடிகர் சிம்பு

தமிழ் சினிமாவில் பன்முக திறமை வாய்ந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்குள் நுழைந்த இவர் நடிப்பு மட்டுமல்லாது பாடுவது, பாடல் வரிகள் எழுதுவது, இயக்குவது போன்ற பல திறமைகளை கற்ற சகலகலா வல்லவர்.

இடைப்பட்ட காலத்தில் படங்கள் சரியாக ஓடாமல் இருந்து வந்த இவருக்கு மீண்டும் சிறந்ததொரு கம்பேக் கொடுத்த படம் 'மாநாடு'. தனது பாடி ட்ரான்ஸ்ஃபர்மேஷன் மூலமாக அனைவரையும் அசர வைத்தார் நடிகர் சிம்பு.

‘வெந்து தணிந்தது காடு’ படம்

தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் 'வெந்து தணிந்தது காடு' படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இணைந்துள்ளது. இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

siddhi-idnani-simbu

நடிகை சித்தி இத்னானி பேட்டி 

இந்நிலையில், ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை சித்தி இத்னானி தற்போது தனியார் சேனல்களில் பேட்டி கொடுத்து வருகிறார்.

இதனையடுத்து ஒரு தனியார் சேனலில் அவர் பேசும்போது, ஒரு சுவாரஸ்யமான கற்பனைக் கதை சொல்லி, அதில் அவர் சிம்புவுடனான காதல் குறித்து பேசியுள்ளது ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அந்தப் பேட்டியில் அவர் பேசுகையில் -

என் கற்பனை கதையில் சிம்புவும், நானும் பள்ளிப்பருவ காதலர்கள். என் தந்தையாக ரஜினிகாந்த் இருக்க வேண்டும், சிம்புவின் அண்ணனாக உதயநிதி இருக்க வேண்டும். இறுதியில் ரஜினியும், உதயநிதி ஸ்டாலினும் சேர்ந்து எங்கள் இருவருக்கும் கல்யாணம் பண்ணி வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கலகலப்பாக கூறியுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

siddhi-idnani-simbu-rajinikanth