பிக்பாஸ் டைட்டில் வின்னர் திடீர் மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்
இந்தி பிக்பாஸ் 13வது சீசனில் டைட்டில் வின்னரான நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
டிவி தொடர்களில் நடித்து வந்த சித்தார்த் சுக்லா 2014ஆம் ஆண்டு வெளியான ‘ஹம்டி ஷர்மா கி துனியா’ என்ற படம் மூலம் பாலிவுட் திரையுலகில் நடிகராக அறிமுகமானார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 13வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் மாரடைப்பு காரணமாக மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் உயிரிழந்துள்ள தகவல் பாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
40 வயதான அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது தான் பாலிவுட் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. ஆனால் அதற்குள் இத்தகைய சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.