சினிமாவை விட்டு விலகவுள்ளேன்.. பிரபல நடிகர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

Siddharth
By Petchi Avudaiappan May 17, 2022 07:03 PM GMT
Report

சினிமாவை விட்டு விலக போவதாக நடிகர் சித்தார்த் திடீரென அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சித்தார்த் தொடர்ந்து ஆய்த எழுத்து, உதயம் என் எச் 4, தீயாய வேலை செய்யனும் குமாரு, ஜிகர்தண்டா, காவியத் தலைவன் ஆகிய படங்களிலும், தெலுங்கிலும் பல ஹிட் படங்களில் நடித்து மிக முக்கிய ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். 

சமூகவலைதளங்களில் தொடர்ச்சியாக இயங்கும் சித்தார்த் தான் நடிக்கும் படங்களை விளம்பரப்படுத்துவது மட்டுமன்றி, அரசியல் ரீதியான கருத்துகளையும் துணிச்சலாக வெளியிட்டு வருகிறார். சில சமயங்களில் தனது ட்வீட்களின் மூலம் சர்ச்சைகளிலும் சிக்கும் சித்தார்த் என்றும் பரபரப்புக்கு பஞ்சமில்லாதவராக உள்ளார். 

இந்தியன் 2, மகா சமுத்திரம், சைத்தான் கே பச்சா, திரைப்படங்களை மட்டுமே கைவசம் வைத்து இருக்கும் அவர் தற்போது டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரின் வெளியாக உள்ள எஸ்கேப் லைவ் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இதனிடையே இனியும் நல்ல கேரக்டர்கள் கிடைக்கவில்லை என்றால் சினிமாவிலிருந்து விலகிவிட முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.