சமந்தாவை சீண்டும் முன்னாள் காதலன் சித்தார்த்? - ட்விட்டரில் பதிவிடும் கருத்தால் சர்ச்சை
நடிகர் சித்தார்த் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு நடிகை சமந்தாவை குறிப்பிடுவதாக இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நட்சத்திர ஜோடிகளாக வலம்வந்த இருவரும் விவாகரத்து செய்ய போவதாக சமீப காலமாகவே ஊடகங்களில் செய்திகள் பரவிய நிலையில் நேற்று இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த சம்பவம் இந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நடிகர் சித்தார்த் பதிவிட்ட ட்விட்டர் பதிவு ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதில், ‘பள்ளி ஆசிரியரிடம் நான் கற்றுக்கொண்ட முதல் பாடம் என்னவெனில் ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள்’ என்று கூறியுள்ளார். இதேபோல் அவரின் பழைய பதிவு ஒன்றும் வைரலானது. அதில் நாகூர் பிரியாணி உளுந்தூர் பேட்டையில் இருக்குற ஒரு தெரு நாய்க்கு கிடைக்கும்ன்னு எழுதி இருந்தால், அதை யாராலும் மாற்ற முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.
One of the first lessons I learnt from a teacher in school...
— Siddharth (@Actor_Siddharth) October 2, 2021
"Cheaters never prosper."
What's yours?
இவை இரண்டும் நடிகை சமந்தாவை குறிப்பிடுவதாக இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.2013 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் நடிகர் சித்தார்த்தும், நடிகை சமந்தாவும் காதலித்து வந்த நிலையில் அவர்கள் பிரிந்தனர்.
இதுகுறித்து கடந்தாண்டு கருத்து தெரிவித்த சமந்தா, சாவித்ரி போன்று தானும் பெரும் பிரச்சனையில் சிக்காமல் தப்பி விட்டதாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சித்தார்த்தின் இந்த பதிவு திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.