சாய்னா நோவாலிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் சித்தார்த் - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி
பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சித்தார்த்தின் ட்வீட் மிகப் பெரிய சர்ச்சையான நிலையில், இதற்கு அவர் மன்னிப்பு கேட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பஞ்சாப்பில் பாதுகாப்பு காரணங்கள் மற்றும் மக்கள் போராட்டத்தால் பிரதமர் மோடியின் வாகனம் நிறுத்தப்பட்டது. இதனால் அவர் பாதியில் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. பிரதமர் மோடியின் நிகழ்ச்சி இப்படி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது நாடு முழுக்க கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நோவாலும் தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.
ஒரு நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் அந்த நாட்டை எப்படி பாதுகாப்பான நாடு என்று சொல்ல முடியும். பிரதமர் மீது தாக்குதல் நடத்தியவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் என சாய்னா நேவால் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த ட்விட்டை ரீ ட்விட் செய்த பிரபல நடிகர் சித்தார்த் இரட்டை அர்த்தம் வரும்படி கிண்டல் செய்து இருந்தார். இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இந்திய மகளிர் ஆணையம் இது தொடர்பாக விசாரணை நடத்த பரிந்துரை விடுத்தது. இது தொடர்பாக தமிழ்நாடு போலீசுக்கு புகாரும் சென்றது.
Dear @NSaina pic.twitter.com/plkqxVKVxY
— Siddharth (@Actor_Siddharth) January 11, 2022
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உங்கள் ட்வீட் ஒன்றிற்கு நான் அளித்த மூர்க்கத்தனமான நகைச்சுவைக்காக (rude joke) நான் உங்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் பல விஷயங்களில் உங்களுடன் உடன்படாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் ட்வீட்டைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் அல்லது கோபம் கூட எனது தொனியையும் வார்த்தைகளையும் நியாயப்படுத்த முடியாது. என்னால் அதை விடச் சிறப்பாகப் பேச முடியும் என்பதை நான் அறிவேன்.
எந்தவொரு ஜோக்கையும் விளக்க வேண்டும் என்றால், அது ஒரு நல்ல ஜோக் இல்லை என்ற சொற்றொடர் உள்ளது. எனவே, அந்த ஜோக்கிற்கு என்னை மன்னிக்கவும் என சாய்னா நோவாலிடம் அறிக்கை மூலம் நடிகர் சித்தார்த் கேட்டுக் கொண்டுள்ளார்.