ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் சித்தராமையா : நாளை பதவியேற்பு

Karnataka Election
By Irumporai May 19, 2023 04:04 AM GMT
Report

கர்நாடக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் புதிய முதல்வர் சித்தராமையா.

 காங்கிரஸ் வெற்றி

கர்நாடகாவில் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி , நேற்று மாநில முதல்வர் யார் என அறிவித்தது.சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவியது. பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் முடிவு அறிவிக்கப்பட்டது .

ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் சித்தராமையா : நாளை பதவியேற்பு | Siddharamaiya Govt Sworn Tomorrow At Bangalore

ஆளுநரிடம் சந்திப்பு

நேற்று காங்கிரஸ் செய்தியாளர்கள் சந்திப்பில், சித்தராமையா தான் கர்நாடகாவின் புதிய முதல்வர் என அறிவித்தனர். இதனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். டி.கே.சிவகுமார் துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு கர்நாடகா ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டை சந்தித்து புதிய ஆட்சி அமைப்பதற்கு சித்தராமையா உரிமை கோரினார். நாளை பெங்களூருவில் பதவியேற்பு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

நாளை பெங்களூரில் சித்தராமையா அரசு பதவி ஏற்கும் நிலையில் இந்த பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட ஆறு மாநில முதல்வர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது