பிரபல நடிகர் திடீரென மயங்கி விழுந்து மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல சீரியல் நடிகர் சித்தார்த் வீர் ஜிம்மில் திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்த செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பிரபல சீரியல் நடிகர் மரணம்
மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர் சித்தார்த் வீர் சூர்யவன்ஷி (46). இவர் இந்தி சேனல்களில் ஒளிபரப்பான குஷும் உள்பட நிகழ்ச்சிகளால் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.
இந்நிலையில், பிரபல 'டிவி' நடிகர் சித்தார்த் வீர் சூர்யவன்ஷி நேற்று காலை 'ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார்.
இதைப் பார்த்த ஜிம்மில் இருந்தவர்கள் உடனடியாக இவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சித்தார்த் வீர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
சித்தார்த் வீர் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
சித்தார்த் வீர் முதல் மனைவியை விவாரத்து செய்து விட்டு, சூர்யவன் சிக்கு என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்ட இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.