கர்நாடக மாநில முதலமைச்சராக பதவியேற்றார் சித்தராமையா
கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக 2வது முறையாக பதவியேற்றார் சித்தராமையா.
முதலமைச்சராக பதவியேற்றார் சித்தராமையா
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சுமார் 125 இடங்களுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று பெம்பான்மையை நிரூப்பித்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடகா முதலமைச்சராக போவது யார் என்ற எதிர்பார்பு நிலவி வந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் மேலிடம் முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பார்கள் என்று அறிவித்தது.
இதையடுத்து இன்று கர்நாடகா முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்களாக சித்தராமையா, டி.கே.சிவக்குமார் பதவியேற்றனர். இவர்களுக்கு கர்நாடக ஆளுநர் தாவத் சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கர்கே,ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.