திருவிழாவில் நடனம் ஆடும் முன்னாள் முதலமைச்சர் - வைரலாகும் வீடியோ

viralvideo siddaramaiah siddaramaiahdancevideo
By Petchi Avudaiappan Mar 26, 2022 09:55 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா பாரம்பரிய நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

 கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை கர்நாடக மாநில முதலமைச்சராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கும் சித்தராமையாவுக்கு மைசூர் மாவட்டம் சித்தராமன ஹன்டி என்ற கிராமம்தான் சொந்த ஊராகும்.  

இவர் சொந்த ஊரில் நேற்று நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்ற சித்தராமையா பாரம்பரிய நடனத்தை ஆடி அனைவரையும் அசத்தினார். இந்த நடனக்காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தனது இளம் வயதில் இந்த பாரம்பரிய நடனக்குழுவில் சித்தராமையா உறுப்பினராக இருந்துள்ளார். இதனிடையே வீடியோ வைரலானது குறித்து சித்தராமையா கூறுகையில்,  பலரைப் போன்று நான் எழுத்துப் பலகையில் எழுதப்படிக்கவில்லை. எனது நடன ஆசிரியரின் உதவியால் நான் மண்ணில் எழுதிப் படித்தேன் என்று கூறியுள்ளார்.