எஸ்எஸ்ஐ செய்த மோசமான வேலை - காரின் மேல் கதறிய இளைஞர்!
பைக் ஓட்டுநரை கார் பேனட்டில் இழுத்து சென்ற போக்குவரத்து எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
எஸ்எஸ்ஐ செயல்
நெல்லை டவுன் கணேஷ் தியேட்டர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அந்த பைக் சேதமடைந்தது. இதனால் பைக் ஓட்டுநர் தனது பைக் மீது மோதிய காரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது காரை ஓட்டி வந்தது போக்குவரத்து காவல் பிரிவு எஸ்ஐ காந்தி ராஜன் என்பது தெரிய வந்தது.
உடனே காந்தி ராஜன் தனது காரை எடுக்க முயற்சித்தார். ஆனால் காரை எடுக்கவிடாமல் பைக் உரிமையாளர் தனக்கு நியாயம் வேண்டும் என கார் பேனட் மீது படுத்துக்கொண்டார். ஆனாலும் காரை நிறுத்தாத எஸ்.ஐ, பேனட் மீது படுத்த நபருடன் சுமார் அரை கிமீ தூரம் காரை ஓட்டி சென்றார்.
அலறிய நபர்
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், எஸ்ஐ காந்தி ராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், அவரை ஆயுதப்படைக்கு மாற்றி மாநகர காவல் துணை ஆணையாளர் பிரசன்ன குமார் உத்தரவு பிறப்பித்தார்.
தொடர் விசாரணையில், பைக்கை ஓட்டி வந்தவர் பெயர் அசோக் குமார் என்பதும், அவர் டவுன் செண்பகம் பிள்ளை தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி என்பதும் தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்து புகார் பெற போலீசார் முயற்சி எடுத்து வருகின்றனர்.