ஷியாம் சிங்கா ராய் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி வெளியீடு - ரசிகர்கள் மகிழ்ச்சி

shyamsingharoy deletedscene
By Petchi Avudaiappan Jan 22, 2022 05:32 PM GMT
Report

நடிகர் நானியின் ஷியாம் சிங்கா ராய் படத்தின் நீக்கப்பட்ட காட்சியை படக்குழு தங்களது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

கடந்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியான ஷியாம் சிங்கா ராய் திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஒடிடியில் வெளியாகி உள்ளது. ராஜமெளலியின் நான் ஈ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான  நானி இயக்குநர் ராகுல் சங்க்ரீத்யன் இயக்கத்தில் சாய் பல்லவியுடன் நடித்திருந்தார். 

தேவதாசியாக நடிகை சாய் பல்லவி இந்த படத்தில் மிரட்டி உள்ளார் என்றே சொல்ல வேண்டும். அதுவும் நவராத்திரி விழாவில் நடைபெறும் அந்த பாடல் காட்சிகளில் அவர் நடனமாடும் காட்சிகள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. அதே போல கிளைமேக்ஸ் காட்சியில் நானியும் சாய் பல்லவியும் சந்திக்கும் அந்த காட்சியும் ரசிகர்களை கண்கலங்க வைத்தது. 

இந்நிலையில் ஒடிடி தளத்தில் எந்தவொரு காட்சியும் டெலிட் செய்யாமல் படங்கள் வெளியாகி வரும் நிலையில், எடிட்டிங்கிலேயே நீக்கப்பட்ட ஒரு சூப்பரான காட்சியை தற்போது நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஷியாம் சிங்கா ராய் தேவதாசிகளிடம் ஏற்கனவே சகஜமாக பேசுவது போல இருக்கும் அந்த காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.