ஜெய்பீம் படக்குழுவினருக்கு கண்டனம் தெரிவித்த பிரபல அரசியல் தலைவரின் மகன் - கோபத்தில் ரசிகர்கள்
ஜெய் பீம் படக்குழுவினர்களுக்கு டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி தனது ட்விட்டர் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சூர்யா தயாரித்து நடித்து கடந்த நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் சில காட்சிகளில் வன்னியர் சமூதாயம் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறதாக சர்ச்சைகள் எழுந்தது. ஜெய்பீம் தமிழக அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலராலும் பாராட்டப்பட்டது. படத்தில் வரும் வக்கீல் சந்துருதான் பின்னர் நீதிபதி சந்துருவாக உயர்ந்து ஆயிரக்கணக்கான வழக்குகளுக்கு நல்ல தீர்ப்பு வழங்கி ஏழை எளியவர்களுக்கு நல்லது நடக்க காரணமாக இருந்தார்.
பழங்குடியினர் எப்போது சாதிய படிநிலைகளுக்குள் திணிக்கப்பட்டனர்?
— Shyam Krishnasamy (@DrShyamKK) November 16, 2021
Schedule Tribe என்று SC தீண்டாமையுடன் சேர்த்த பிறகா?
தலித்திய வாதிகளும் திடீர் சமூகநீதி ஈசல்களும் தங்களை தாங்களே சிறுமை படுத்திக்கொள்ளும் அரசியலை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள்.
பழங்குடியினர் மீது திணிக்க வேண்டாம்.
இதனிடையே சில தினங்களுக்கு முன் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் வெளியிட்டிருந்த அறிக்கையில் ஜெய்பீம்' திரைப்படம் எளியோருக்கு எதிரான அரசப் பயங்கரவாதத்தை மிகவும் துல்லியமாக அம்பலப்படுத்தியுள்ளது. சட்டமும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் காவல்துறை உள்ளிட்ட ஆட்சி நிர்வாக அமைப்புகளும் எவ்வாறு தலித் மற்றும் பழங்குடியினர் போன்ற விளிம்புநிலை மக்களுக்கு எதிராக இயங்குகின்றன?
அவை சாதிய, மதவாத கும்பலால் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன? மாந்தநேயமில்லாத ஆதிக்க வெறியர்களின் கைகளில் சிக்கும் ஆட்சிநிர்வாக அதிகாரம் எவ்வளவு குரூரம் வாய்ந்ததாக எளியோரின் குருதியைக் குடிக்கிறது? போன்றவற்றையெல்லாம் இப்படம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது என தெரிவித்திருந்தது. சர்ச்சைக்குரிய காட்சிகள் மாற்றப்பட்டும், இதுகுறித்து சூர்யா பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸூக்கு விளக்கமளித்தும் இன்னும் பிரச்சனை முடிந்தபாடில்லை.
இந்நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகனும் வன்னியர்களுக்கான ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவே கூறப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே, ஜெய்பீம் படக்குழுவினருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்..
அதில் சில ட்வீட்கள்தான் இவை: "இவனுங்களுக்கு நியாயமான கேள்விகளை பக்குவமாக கேட்டால் திமிரா தான் பதில் சொல்லுவானுங்க... பெரிய கொம்பன் என்ற நினைப்பை எல்லாம் உடைத்து ஹீரோ முதல் தயாரிப்பாளர் வரை அழ விட்டாத்தான் இவனுங்க சண்டியத்தனம் கொஞ்சமாவது அடங்கும்! எனவும், "அதிகாரத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியினரின் கதையில் எதற்கு உண்மைக்கு புறம்பாக வன்னியர்களை கலங்கப்படுத்தனும் என சினிமா காரனிடம் அந்த சாதியை சார்ந்தவர்களின் நியாயமான கேள்வியை, அப்படியே பழங்குடியினருக்கு எதிரானதாக திரித்து தனக்கான ஆதரவை திரட்டும் யுக்தியாக மாற்றுகிறான் சினிமா காரன்! என்றும் கூறியுள்ளார்.
இதனைக் கண்ட சூர்யாவின் ரசிகர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.