37 வயதில் பிரபல தொகுப்பாளரை கரம் பிடித்த சீரியல் நடிகை - ஃபோட்டோஸ் வைரல்!

Serials Indian Actress Marriage Viral Photos
By Sumathi 1 மாதம் முன்

சீரியல் நடிகை ஸ்வேதா பண்டேகர் திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

சீரியல் நடிகை

2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மகள்’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் ஸ்வேதா பண்டேகர்(37). அதன் பின் பிரபல சோப், நெய் விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

37 வயதில் பிரபல தொகுப்பாளரை கரம் பிடித்த சீரியல் நடிகை - ஃபோட்டோஸ் வைரல்! | Shwetha Bandekar Ties The Knot With Mal Maruga

தொடர்ந்து 2007 -ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ’ஆழ்வார்’ திரைப்படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார். அதனையடுத்து, 2008-ஆம் ஆண்டு சத்யா நடிப்பில் வெளியான ’வள்ளுவன் வாசுகி’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

திருமணம்

இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘பூலோகம்’ படத்திலும் நடித்திருந்தார். சினிமா கைகொடுக்காத நிலையில், சந்திரலேகா சீரியல் மூலம் மக்களின் மனங்களில் இடம் பிடித்தார். சுமார் 8 ஆண்டுகள் இந்த சீரியல் வெற்றிக்கரமாக ஓடியது.

37 வயதில் பிரபல தொகுப்பாளரை கரம் பிடித்த சீரியல் நடிகை - ஃபோட்டோஸ் வைரல்! | Shwetha Bandekar Ties The Knot With Mal Maruga

இந்நிலையில், பிரபல தொகுப்பாளரான மால் முருகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.